பின்ஸ்பரி பூங்காத் தாக்குதல், 2017
பின்ஸ்பரி பூங்காத் தாக்குதல் அல்லது பின்ஸ்பரி பூங்கா மசூதித் தாக்குதல் என்பது 19 சூன் 2017 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இலண்டன் நகரில் பின்ஸ்பரி பூங்கா பகுதியில் வாகனத்தை பாதசாரிகள் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்நிகழ்வில் 11 பேர் காயமடைந்தனர் ஒருவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலானது மோசமான தீவிரவாதத் தாக்குதல் என இலண்டன் மேயர் தெரிவித்தார். ரமலான் மாதத்தின் தொழுகை முடித்து வந்து கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இத்தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. சமூக மனித உரிமைகள் அமைப்புகள் ஐக்கிய ராச்சியம் இஸ்லாமிய மயமாவதன் விளைவாகவே இம்மாதிரியான தாக்குதல்கள் நடைபெறுகின்றன எனக் கருத்து தெரிவித்துள்ளன.